இராமநாதபுரம்
ஈரான் தாக்குதலில் பலியான இளைஞர் உடல் தகனம்

ஈரான் தாக்குதலில் பலியான இளைஞர் உடல் தகனம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 36). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் சந்தான செல்வத்தின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.




