இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முதல் நாள்: செப்டம்பர் 26, 2025
துவக்கவிழா மற்றும் மரக்கன்று நடுதல்
முதல் நாளில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் துவக்கவிழா நடைபெற்றது, முகாம் நடைபெறுவதற்கான முகாம் பணிகளுக்கு தயார் செய்தல்.
சிறப்புமுகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை
முதல் நாள்: செப்டம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை ) துவக்கவிழா மற்றும் மரக்கன்று நடுதல்
இராமநாதபுர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அவர்கள் உத்தரவின் பேரில், மாவட்ட தொடர்பு அலுவலர் நீ மங்களநாதன் ஆலோசனையில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது, இதன் துவக்க விழா மு.வாகைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த துவக்க விழாவிற்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஷா. ஜஹாங்கீர் தலைமை வகித்தார், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி வரவேற்புரை ஆற்றினார்கள். சிறப்பு முகாமை முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் செ.சண்முகம் அவர்கள் மரக்கன்று ஊன்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் அ.ஷாஜஹான் அவர்கள், முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அ.செல்வராஜ் அவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நீ.மங்களநாதன் அவர்கள், பேரூராட்சி மன்ற 3 வது வார்டு கவுன்சிலர் இரா.மாரியம்மாள், வட்டார கல்வி அலுவலர் அ.முருகேஸ்வரி அவர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.யாகம்மாள்மேரி அவர்கள், மு.வாகைக்குளம் கிராம தலைவர் க.ஆறுமுகம் அவர்கள் மற்றும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சீ.காதர் முகைதீன் அவர்கள் கல்விக் குழு தலைவர் காஜா நஜுமுதீன் அவர்கள், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் காஜா கமருதீன் அவர்கள், பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் அ.பாசில் அமீன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன் அவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹுசைன், தமீம் அன்சாரி, கமால்பாட்சா அவர்கள், பட்டதாரி ஆசிரியர் கண்ணன் அவர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள்,பள்ளியின் அனைத்து வகை அமைவுகளின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதுகலை பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் காமிலா பானு அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்நிகழ்வில் மாணவர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊர் கிராம முக்கியஸ்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் செய்திருந்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button