இராமநாதபுரம்
அடையாள அட்டை வழங்கும் விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி ஆகியவற்றை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன்,அரசு துறை அலுவலர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.




