இராமநாதபுரம்

அமைச்சர் ஆறுதல்

அமைச்சர் ஆறுதல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அருகே மேலத்தூவல் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர் கடந்த 2-ம் தேதி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பலியானார் அவரைக் காப்பாற்ற சென்ற அவரது மகன் கிஷோர் குமார் காயம் பட்ட நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இறந்த சித்திரவேல் அவர்களின் குடும்பத்தாருக்கு மின்சாரவாரியம் சார்பில் 10 லட்சம் நிவாரண நிதியும், தமிழக அரசு சார்பில் 2.5 சென்ட் வீட்டு மனை, இறந்தவர் மனைவிக்கு 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் வேலையும் வழங்கபட்டது.
முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் R.Sராஜகண்ணப்பன் அவர்கள் கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்த சித்திரவேல் அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button