இராமநாதபுரம்முதுகுளத்தூர்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம், வெங்கலக்குறிச்சி பஞ்சாயத்து தொட்டிவலசை கிராமத்தில் 13.08.2025 அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் சுந்தரமூர்த்தி,உதவி இயக்குநர், தலைமை தாங்கினார்.
கால்நடை உதவி மருத்துவர்கள்
வினிதா, மோகன்,
கால்நடை ஆய்வாளர் வீரன், முனீஸ்வரி
மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ரேணுகாதேவி
ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 65 பயனாளிகளின்
1789 கால்நடைகள் பயனடைந்துள்ளது.
முகாமில் சிகிச்சைப் பணி,
அறுவை சிகிச்சைப் பணி,
செயற்கை முறை கருவூட்டல்,
ஆண்மை நீக்கம்,
குடற்புழு நீக்கம்,போன்ற பணிகள் செய்யப்பட்டன.ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நோட்டீஸ் விவசாய பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளின் உரிமையாளர் மற்றும் சிறந்த கால்நடை வளர்போருக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பொறியாளர் (ஓய்வு) இருளாண்டி நன்றியுரை ஆற்றினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button