General News

முதுகுளத்தூரில் அபாய மின்கம்பங்களால் பீதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சாய்ந்து விழ காத்திருக்கும் மின்கம்பங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.முதுகுளத்தூர் கொன்னையடி விநாயகர் கோயில் தெரு, வடக்கூர், மு.தூரி, காந்திசிலை, அரப்போது, கீழச்சிறுபோது உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. அதிகமான மின் இணைப்புகள் கொண்ட கொன்னையடி விநாயகர் கோயில் தெருவிலுள்ள மின்கம்பத்தின் அடியில், எவ்வித பிடிமானமும் இல்லாததால், இப்பகுதியினர் சிமென்ட் பூசி பாதுகாத்து வருகின்றனர்.இப்பகுதி பாலையன் கூறுகையில், “”முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டோரத்தில் உள்ள சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க, முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை,” என்றார்.மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button