ஜூலை 19, துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் 50வது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 19, துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் 50வது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் :
துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் 50வது சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி
19 ஜூலை 2025 சனிக்கிழமை
அமீரக நேரப்படி மாலை 7.30 மணி முதல் இரவு 9 மணி ( இந்திய நேரம் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை) வரை நடக்க இருக்கிறது.
இத்தகவலை டிவைன் பிளாக் மஜ்லிஸ் ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா
ஏ. முஹம்மது மஃரூப் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது :
துபாய் டி பிளாக்கில் ஒவ்வொரு வாரமும் நேரடியாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வந்தது.
பின்னர் ஏற்பட்ட சட்ட திட்டங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சியானது இணைய வழியாக நடந்து வருகிறது.
வரும் சனிக்கிழமை 19 ந் தேதி நடக்க இருக்கும் 50வது சிறப்பு நிகழ்ச்சிக்கு
சேலம், நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர்
மௌலவி M. செய்யது அபுதாஹிர் பாகவி
தலைமை வகிக்கிறார்.
தமிழக ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்
மௌலானா மௌலவி
P.A. காஜா முயீனுத்தீன் பாகவி,
“இக்லாஸ்-மனதின் புனிதம்” என்ற தலைப்பில்
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
Meeting ID: 318 608 6949
Passcode: 434710
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3186086949?pwd=WFRPU0NNVk5aSGRGa1VLeUI4RG5BUT09&omn=89833587456
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.




