இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்,6 முன்னிட்டு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்,6 முன்னிட்டு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்,6 முன்னிட்டு மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை, அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட தமுமுக சார்பில் கருப்புத் துண்டு அணிந்து கோரிக்கை போராட்டம் தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது MLA. தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாவா ராவுத்தர், மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம் முன்னில வைத்தனர்.. தோழமைக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button