இராமநாதபுரம்

கீழக்கரையில் சமூக நல அமைப்பு சார்பில் வெற்றிப் பாதை – உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கீழக்கரையில் சமூக நல அமைப்பு சார்பில் வெற்றிப் பாதை – உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீழை சமூக நல அமைப்பு சார்பில்“வெற்றி பாதை” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில். 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த தெளிவான புரிதலை வழங்குவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். மாணவர்கள் உயர்கல்வி குறித்த இலக்குகளை சிறு வயதிலேயே அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அமீர் பாட்சா வழங்கிய கருத்துரையில் படைப்புத்திறன் சார்ந்த கல்வித் துறைகள் மற்றும் திறன் வளர்ப்பு பற்றிய பயனுள்ள தகவல்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வழக்கறிஞர் முஹம்மது நபீல் வழங்கிய உரை மாணவர்களை பல்வேறு கல்விச் சந்தர்ப்பங்களை தைரியமாக ஆராய வேண்டும் என்று ஊக்குவித்தார்,
நிகழ்ச்சியின் சிறப்பு பற்றி பொறியாளர் அப்துல் மதீன் பி.டெக் (கல்வி ஆலோசகர் – விஸ்டம் கல்லி வழிகாட்டி வழங்கினார். உயர்கல்வி துறைகள், போட்டித் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள், திறன் மேம்பாடு, இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் ஆழ்ந்து கவனித்து கேட்டதுடன், பலரும் கல்வி தொடர்பான சந்தேகங்களை முன்வைத்து தெளிவுபெற்றனர். கேள்வி–பதில் நிகழ்ச்சி மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி ஆசிரியர் தஸ்தகீர் நன்றியுரை மூலம் நிறைவு பெற்றது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
“வெற்றி பாதை” நிகழ்ச்சி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள வழிகாட்டுதலாக அமைந்தது. மாணவர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாக அமைத்து முன்னேற உதவும் நிகழ்ச்சியாக இது பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செய்யது சலீம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button