மீன் வளத்துறை ஆய்வாளர் 1600/ ரூபாய் லஞ்சம் வாங்கி கைது

மீன் வளத்துறை ஆய்வாளர் 1600/ ரூபாய் லஞ்சம் வாங்கி கைது

ராமநாதபுரம்மாவட்டம். பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரிடம் தனது இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்காக உரிமை மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்காக அனுமதியைப் பெற மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார். அதற்கு மீன் வளத்துறை ஆய்வாளர் புகார்தாரரிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பெற வேண்டுமெனில் ரூ.5,100/ கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைரூ. 3500/ தானே என்று கேட்டு தனக்கு தனியாக.ரூ 1600/ கொடுத்தால்தான் உனக்கு அனுமதி கிடைக்கும் எனக் கூறியதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார் அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் புகார்தாரர் மீன்வளத்துறை ஆய்வாளரை சந்தித்தபோதுஅவர் ரசாயனம் தடவிய பணம் ரூ.1600/ லஞ்சமாக வாங்கினார் அப்போது மீன்வளத்துறை ஆய்வாளர்.சகுபர் சாதிக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




