இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் பட்டினம் காத்தானில் உள்ள தனியார் திருமண மஹாலில் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் ஜூலை,24 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.கூட்டத்தில்
12-தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது,
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது,இந்நிகழ்வில் வனம் மற்றும் கதர் வாரியத்துறை
அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் மற்றும் முன்னாள் எம்பி அன்வர் ராஜா, பவானி ராஜேந்திரன், சுந்தர்ராஜன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் மற்றும் மாநில,மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் மேலும் தமிழக முதல்வர் வருகை குறித்து வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் நிர்வாகிகளிடையே ஆலோசனைகள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மறைந்த நடிகர் மு.க. முத்து, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button