இராமநாதபுரம்
எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை

எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது இதைச் சுட்டிக்காட்டி உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர், அத்தோடு குப்பைகள் கொட்டப்படுவது, தோண்டப்பட்ட சாலைகள் சரிப்படுத்தப்படாமல் உள்ளது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இதற்கு முன்பு கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நடவடிக்கை எடுத்த பேரூராட்சி மன்ற சேர்மன் பேரூராட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்வில், SDPI கட்சியின் மண்டபம் நகரத் தலைவர் அசாருதீன், நகரத் துணைத் தலைவர் சாதிக், நகரச் செயலாளர் யாசர், முன்னாள் நகர தலைவர் ஹாலிக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்




