வளைகுடா
புனித மதினா நகரில் நபிகளாரின் பொன்மொழிகள் நூல் தமிழில் வெளியீட்டு விழா

புனித மதினா நகரில் நபிகளாரின் பொன்மொழிகள் நூல் தமிழில் வெளியீட்டு விழா
மதினா :
சௌதி அரேபியாவின் புனித மதினா நகரில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல் சலாம் அரங்கில்
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் முஸ்னது அஹ்மத் என்ற நபிகளாரின் பொன்மொழிகளின் தமிழாக்கத்தின் எட்டாம் பாகம் வெளியீட்டு விழா 16.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை, ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பவுண்டேஷனின் டாக்டர் ஹெச். அப்துல் ரஹ்மான் +966 50 2708674
தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை சிறப்புடன் செய்துள்ளனர்.
சௌதி அரேபியாவில் நடைபெற இருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சமூகத்தினர் திரளாக பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




