தமிழ்நாடு
மதுரை காந்தி அருங்காட்சியகம் : இலவச அனுமதி தொடருமா ?
மதுரை காந்தி அருங்காட்சியகம் அனுமதி ஆண்டாண்டு காலமாக இலவசமாகவே இருந்தது.முந்தைய அரசு தந்த நிதியில் புதுப்பிக்கப்பட்டதை த.வெ.க. அரசு திறந்து வைத்து விட்டு, நுழைவுக்கட்டணம் ரூபாய் இருபது வசூலித்து வருகின்றனர்.
இது சரியல்ல தேசப்பிதாவை உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவசியம் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் நுழைவுக்கட்டணம் வாங்காமல் இலவசமாக அனுமதித்தார்கள்.காண்பதற்கு ஆவலோடு வந்த ஏழைகள் 20 ரூபாய் என்றதும் பார்க்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
உடனடியாக இலவசமாக அனுமதிக்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன். கவிஞர் இரா .இரவி


