இராமநாதபுரம்

கீழக்கரை தோப்பில் கடல் அட்டை வேட்டை: 540 கிலோ பறிமுதல்

கீழக்கரை தோப்பில் கடல் அட்டை வேட்டை: 540 கிலோ பறிமுதல்

கீழக்கரை செங்கல் நீரோடை தோப்பில் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வேகவைப்பதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வனச்சரக அலுவலர் கெளசிகா முன்னிலையில், வனவர் காலிதாஸ் தலைமையில் வனக்காப்பாளர்கள் மூர்ஸில் சோமராஜ், பிரபு மற்றும் வேட்டைத்தடுப்பு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 540 கிலோ வேகவைத்த கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தோப்பில் இருந்த கீழக்கரை முஹமது சதக்கத்துல்லா (44), சித்தார்கோட்டை நாகூர் மீரான் (51) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனத்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button