கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தாட்கோ தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் கீழக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் தமிழ்செல்வன் உதவியாளர் (ம) மேலாளர்(பொ) வரவேற்புரை ஆற்றினார், செலினா
தாட்கோ மாவட்ட மேலாளர் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார், நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்தார்,கிருஷ்ண வேணி, நகராட்சி ஆணையாளர் முன்னிலை வகித்தார்,ஹமீது சுல்தான் நகர்மன்ற துணைத்தலைவர் வாழ்த்துரை வழங்கினார்”,டாக்டர். திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்,அருள் நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா நன்றியுரை நிகழ்த்தினார்கள், இந்நிகழ்வில் வட்டாட்சியர் செல்லப்பா,நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்,தூய்மைப் பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது,இந்த நலத்திட்ட உதவிகள் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் நலத்திட்ட உதவி வழங்கி உரையாற்றினார்,




