முதுகுளத்தூர் : 77 வது குடியரசு தின விழா

நமது நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்வில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் மொய்தீன், கல்விக்குழு தலைவர் காஜா நஜ்முதீன், மழலையர் பள்ளி தாளாளர் பாசில் அமீன், தொடக்கப் பள்ளி தாளாளர் காஜா கமருதீன், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜஹாங்கீர், மற்றும் முன்னாள் ஜமாத் தலைவர் முகமது இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, முகம்மது உசேன், தமிமுல் அன்சாரி, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், ஆகியோர் ஒருங்கிணைக்க, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்பு உரையாற்ற, முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் மொகைதீன் சிறப்புரை ஆற்ற, சங்க பொருளாளர் அப்துல்லா அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது








