இராமநாதபுரம்
காஞ்சிரங்குடி ஊராட்சி லட்சுமிபுரத்தில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி

திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அகவை தின விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில்,கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.ஏ.பி.என். அருண்ராஜ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.





