இராமநாதபுரம்

கடலாடி அரசுக்கல்லூரியில் வட்ட சட்டபணிகள்குழு சார்பில்சட்டவிழிப்புணர்வு முகாம்

கடலாடி அரசுக்கல்லூரியில் வட்ட சட்டபணிகள்குழு சார்பில்சட்டவிழிப்புணர்வு முகாம்

கடலாடி;

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடலாடி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாணவர்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.இதில் கல்லூரி முதல்வர்விமலா (பொ)தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பாண்டி முன்னிலை வகித்தார்.

இந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினராக கடலாடி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது பேசியதாவது; மாணவர்கள் பைக்ஓட்டுவதற்கு லைசன்ஸ் எடுக்கவேண்டும்.லைசன்ஸ் எடுப்பதற்கு 18வயது முடிவடைந்தவராக இருக்கவேண்டும் என்றும் சாலைஓரங்கள் வைக்கப்பட்டுள்ள குறியீடு பலகைகளான செவ்வகம்,முக்கோணம் வடிவிலான பலகை வைப்பதற்கான விளக்கத்தை படம் வரைந்து விளக்கிப்பேசினார்.இதற்கான ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் கமலாதேவி செய்திருந்தார்.இதில் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக பி.காம் .மூன்றாம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button