உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உப்பு பரிசோதனை நடைபெற்றது அதில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் பாக்கர் அலி கலந்து கொண்டார்கள் அக்டோபர் 21 ம் தேதி உலகளவில் “அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்” அனுசரிக்கப்படுகிறது.
மக்களின் ஆரோக்கிய வளர்ச்சியில் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வளரும் இளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் அயோடின் குறைபாடு தீவிரமான உடல் மற்றும் அறிவு வளர்ச்சி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இதனைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆய்வுத் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளாக, கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் இணை அமைப்புகள் அரசுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம்கள், பரிசோதனைகள் மற்றும் கிராம சபை தீர்மானங்கள் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் அக்டோபர் 21 ம் தேதி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், கிராம சுயஉதவி குழுக்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு கருத்தரங்குகள், முகாம்கள் மற்றும் பேரணிகள் நடத்தி, சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.




