இராமநாதபுரம்

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் நாள் நிகழ்வில் திட்ட மாணவர்கள் கோவில் வளாகத்தை சுற்றி இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் இராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் திரு. மங்களநாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் பெரியோர்களை மதித்தல் பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துதல் எதிர்கால இலட்சியங்களை அடைவதற்கு முயற்சி செய்தல் ஆகிய பற்றி வலியுறுத்தினார்கள். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button