வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் ஓபிசி அணி சார்பில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி ஓபிசி அணி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் மாபெரும் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது முன்னதாக பரமக்குடி காந்தி சிலை முன்பு ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்பு பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பாஸ்கர சேதுபதி,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன்,மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணகாந்தி,பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதி பாலன்,மாநில செயலாளர் ஆனந்தகுமார்,மாநில சிறுபான்மை மாநில துணைத்தலைவர் அஜீஸ்,மாநில RTI பிரிவு செயலாளர் மில்கா செந்தில்,அகில இந்திய மகிளா காங்கிரஸ் உறுப்பினர் ராமலட்சுமி,மாவட்ட சிறுபான்மை தலைவர் காஜா நஜுமுதீன்,மாவட்ட மனித உரிமை தலைவர் அப்தாகிர், மாவட்ட கலைப்பிரிவு வலம்புரி,நகர் துணைத் தலைவர் ராமச்சந்திரன்,இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் அசாருதீன்,இளைஞர் அணி செயலாளர் தண்டபாணி,முன்னாள் நகர் தலைவர் மகாதேவன்,32 வது வார்டு தலைவர் போஸ்,முன்னாள் வட்டாரத் தலைவர்
தெட்சிணாமூர்த்தி,மற்றும் ஜமருள் உசேன்,நாகூர் கான்,சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




