இராமநாதபுரம்
ட்ரோன் பறிமுதல்

ட்ரோன் பறிமுதல்

ராமேஸ்வரம் தீவுப் பகுதிகளான பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பாம்பன் சாலை பாலத்தில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தனர். காவல்துறையினர் ட்ரோன்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்




