இராமநாதபுரம்
கீழக்கரை IFTN ஆலோசனை கூட்டம்

கீழக்கரை IFTN ஆலோசனை கூட்டம்

IFTN கீழக்கரை நகர் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஹனி நியூட்ரிசன் சென்டரில், நகர் செயலாளர் பாசித் தலைமையில், நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பார்களாக இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது ஃபரூஸ் மற்றும் மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் வரும் ஜுன் மாதம் 15 ம் தேதி கீழக்கரையில் IFTN ஏன் ?எதற்கு?* என்ற தலைப்பில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் செயல்விளக்க அறிமுக கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிமுக கூட்டத்திற்கு, IFTN மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் மற்றும் IFTN மாநில பொதுச் செயலாளர் பெரம்பலூர் ஜெய்னுதீன் ஆகியோர்களை சிறப்புரை ஆற்ற அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது




