General News

ஆமை வேகத்தில் பி.எஸ்.என்.எல்.

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி பகுதிகளில் 10 நாள்களாக, பிஎஸ்என்எல்., “வைமாக்ஸ்’ இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிபட்டுள்ளனர். கடலாடி, கமுதி, சாயல்குடி, வாலிநோக்கம் உட்பட 20 கிளை எக்சேஞச்களை கொண்ட, முதுகுளத்தூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட “தீ’ விபத்தில், போன், இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் தரைவழி போன், பிராட்பேண்ட் இணைப்புகள் இரண்டு நாளில் கிடைத்தது.

ஆனால், 10 நாள்களுக்கும் மேலாக, “வைமாக்ஸ்’ இன்டர்நெட் இணைப்பு பழுது சீரமைக்காததால், வாடிக்கையாளர்கள் அவதிபட்டுள்ளனர். மேலும் வெளி, உள் நாடுகளுக்கு இ.மெயில் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் பிஎஸ்என்எல்., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: “வைமாக்ஸ்’ பழுதை, காரைக்குடியில் இருந்து “டெக்னீசியன்கள்’ வந்து விரைவில் சீரமைக்க உள்ளனர்,” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button