இராமநாதபுரம்
லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் கல்வி வளர்ச்சி நாள் ஜுலை,15 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகவள்ளி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .பெருந்தலைவர் காமராஜரை பற்றி பள்ளி ஆசிரியர்கள் காளிமுத்து, தினேஷ், சித்தி ஜமிமா, உதுமான் அலி, ஆகியோர் பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வின் இறுதியாக கணித ஆசிரியர் மகேஸ்வரி நன்றியுரை கூறினார்.





