General News

துபாயில் ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012

துபாய் : துபாயில் ரேடியோ ஹ‌லோவுட‌ன் இணைந்து ஸ்மைல் ஈவெண்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்வினை 30.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து.
மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்வின் துவ‌க்க‌ச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
இறுதிப்போட்டியில் 15 பேர் ப‌ங்கேற்று அவ‌ர்க‌ளில் ஐந்து சிற‌ந்த‌ பாட‌க‌ர்க‌ளை பின்ன‌ணிப் பாட‌க‌ர் மாணிக்க‌ விநாய‌கம் தேர்வு செய்தார். சிற‌ந்த‌ பாடக‌ர்க‌ளாக‌ தேர்வு பெற்றோர் விப‌ர‌ம் வ‌ருமாறு : கார்த்திக் குமார், ஸ்ருதி ஸ்ரீநிவாஸ் ச‌க்ர‌வ‌ர்த்தி, ஸ்ருதி சுத‌ர்ச‌ன் ச‌க்ர‌வ‌ர்த்தி, பொன் ச‌விதா ம‌ற்றும் த‌க் ஷின‌ இள‌ங்கோ.
அத‌னைத் தொட‌ர்ந்து பாட‌க‌ர் மாணிக்க‌விநாய‌க‌ம் த‌ன‌து பாட‌ல்க‌ள் மூல‌ம் ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்வித்தார். பாவை நியாஸ் ந‌கைச்சுவை துணுக்குக‌ளை வ‌ழ‌ங்கினார்.
சிற‌ப்பிட‌ம் பெற்ற‌ பாட‌க‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ்க‌ளை ரேடியோ ஹ‌லோவின் ச‌திஷ் ம‌ற்றும் அசோக‌ன் வ‌ழ‌ங்கின‌ர்.
நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை சுரேஷ் த‌லைமையிலான‌ குழுவின‌ர் செய்திருந்த‌ன‌ர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button