இராமநாதபுரம்
பரமக்குடி : உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தின் கீழ் பரமக்குடி வடக்கு நகருக்கு உட்பட்ட மஞ்சள் பட்டினம், தர்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 13 துறைகளில்,43 சேவைகளை பொதுமக்கள் பயன்பெறுமாறு விவரங்களையும் விண்ணப்ப படிவத்தையும் வீடு வீடாக சென்று வழங்கி திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , வட்டாட்சியர் வரதன், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம்,வடக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சேதுபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவ கிட்டு, அப்துல்மாலிக், நகராட்சி பொறியாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




