கவிதைகள் (All)

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

மானிடரை உய்விக்க 

மாண்புமிகு தேவனவன் 

மாட்டுக்கொட்டிலில்

மானிடப் பிறப்பெடுத்தார். 

கல் நெஞ்சம் கொண்ட 

கயவர்கள் அவரை அழித்திட

கல்வாரி மலையிலே

சிலுவை சுமக்க வைத்தார். 

கசையடியும் தான் கொடுத்தார். 

முட்கிரீடம் சூட்டி விட்டார். 

முடிவில் சிலுவையில் அறைந்து விட்டார்.

மானிடர் நம் பாவம் போக்கவே

பேரிடர் அனுபவித்தார் – யேசு

உதிரமும் சிந்தி விட்டார். 

உயிரையும் தியாகம் செய்தார்

மரியாளின் மைந்தரவர் 

மரித்த மூன்றாம் நாளில் 

மண்ணுலகில் உயிர்த்தெழுந்தார். 

கர்த்தரின் நாமத்தை ஜெபிப்போர்க்கு

கற்கண்டாய் இனிக்கும் நாவில்

கர்த்தரை தேவனாய் ஏற்றவர்க்கு

கவலைகள் தீரும் வாழ்வில். 

அல்லேலூயா என்று தோத்திரம் செய்தால்

அல்லல்கள் அகலும், அனைத்தும் கைகூடும். 

அவர் காட்டிய வழியிலே நாம்

அனைவரின் மீதும் தூய

அன்பு காட்டி நேசிப்போம். 

அவரது அறநெறிதனை 

அன்றாடம் பின்பற்றி 

அமைதியாய் வாழ்ந்திருப்போம். 

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

24.12.2025. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button