இராமநாதபுரம்

வந்தே மாதரம் முழக்கத்துடன் விதைப்பந்துகள் தயாரிப்பு – ஒரு மணி நேரத்தில் 5 லட்சம்

வந்தே மாதரம் முழக்கத்துடன் விதைப்பந்துகள் தயாரிப்பு. ஒரு மணி நேரத்தில் 5 லட்சம்

N-BROTHERS

 ஒரே நாளில் ஒரே பள்ளியில் மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து ஐந்து லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கிய விந்தையே இன்று தமிழகத்தின் பேச்சு பொருள்.

 திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் சிபிஎஸ்இ, பள்ளிகள் மற்றும் பெண்கள் கல்லூரி. ஐந்தாயிரம் பிள்ளைகள் பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் ஒன்று கூடி விதைப்பந்துகள் தயாரித்தனர்.

 மண், தண்ணீர், மர விதை வகைகள் மாணவ மாணவியர் முன்னாள் குவித்து வைக்கப்பட்டிருந்தது பயிலக தாளாளர் திவாகரன் தலைமை தாங்கி பேசினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கூடியிருந்த வர்களை உறுதிமொழி எடுக்கச் செய்து வானைப் பிளக்கும் வந்தே மாதரம் என முழக்கத்துடன் விதைப்பந்துகளை வீறு கொண்டு செய்ய ஆரம்பித்து வைத்தார்.

 பிள்ளைகள் மாங்கொட்டை, பலாக்கொட்டை, வேப்பமுத்து, புளியங்கொட்டை, நாவல் விதை, சீதா பழ விதைகள், சப்போட்டா பழ விதை, கொடுக்காபுளி விதை, கொய்யாபழ விதைகள், கறிவேப்பிலை பழ விதைகள், கொன்றை விதை, பப்பாளி விதைகள், தேக்கு மர விதை, நெட்டிலிங்கம் மர விதை, பாதாம் கொட்டை என எஸ். ஏ. வி பாலகிருஷ்ணா பிள்ளைகள் மூன்றே நாட்களில் லட்சக்கணக்கான விதைகளை கொண்டு வந்து குவித்திருந்த அந்த அதிசயம் 50 நிமிடங்களில் மண் உருண்டைகளில் சேர்க்கப்பட்டன.

 பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து திருமாறன், திவாகரன் சுடலையாண்டி பிள்ளை, பெஞ்சமின், சாந்தி, பிந்து விதைப்பந்துகள் செய்தனர். ஒரு கோவில் திருவிழா போல, எப்போதோ நடக்கின்ற தேரோட்டம் போல காட்சிகள் அமைந்திருந்தன தன்னார்வத்துடன் விதைப்பந்து திருவிழாவில் கலந்து கொண்ட 5000 பேருக்கும் சாம்பவர் வடகரை ஹரி பிரியாணி நிறுவனம் சார்பில் “ஆல்- அத்தி- அரசு விருது” வழங்கப்பட்டது.

 38 லட்சம் விதைப்பந்துகள் ஏற்கனவே திருமாறன் முயற்சியில் தயாரிக்கப்பட்டு வீசப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் 43 லட்சமாக உயர்ந்துள்ளது. தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் சரியாக முளைத்து மரமாகின்ற இடங்களில் தூவப்படும் என செல்வகுமாரி திவாகரன் மற்றும் திவாகரன் தெரிவித்தனர். அனைத்து ஊடகங்களும் விதைப்பந்து தயாரிப்பை ஆதரிப்பதற்கு திருமாறன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் வரம் ஜவகர் கலந்து கொண்டார். பசுமை மேம்பாட்டு பணிகளுக்காக மாணவ மாணவியருக்கு கிரகாம் பெல் வாழ்த்து தெரிவித்தார்.

 தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் மலைப்பகுதி, ஆற்றோரம், குளக்கரை, சாலையோரம் விதைக்கப்பட மணிமுத்தாறு 9வது பட்டாலியன் போலீஸ் எஸ். பி கார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button