கவிதைகள் (All)

சிந்தூர் செயல்திட்டம்

சிந்தூர் செயல்திட்டம்.
( ஆபரேஷன் சிந்தூர்)

சொந்த மண் காஷ்மீரின்
சொர்க்க பூரி அழகைக்காண
சொந்தபந்தங்களுடன் சென்ற
இந்தியக் குடிமக்கள்
இருபத்து ஏழ்வரை நீ
இந்துவா என்று கேட்டு
இடைமறித்துக் கொன்ற
இரத்த வெறி பிடித்த
இரக்கமற்ற நாய்கள்
இஸ்லாமிய பயங்கரவாதிகளையும்
இயக்கிய வல்லூறுகளையும்
இந்திய தேசத்தின்
இறையாண்மை காத்திட
இரும்புக்கரம் கொண்டு தாக்கி
இல்லாது ஒழிக்கும் நாளே
இந்தியாவிற்கு நன்னாள்.
இதற்கு போர் தொடுக்கும்
இந்திய அரசுக்கும்
இந்திய எல்லைகாக்கும்
இந்திய ராணுவத்தினருக்கும்
இந்தியர் அனைவரும்
இணைந்து குரல் கொடுப்போம்
இறுதிவரை துணையிருப்போம்.
இனியொரு போர் பூண்டால்
இல்லாது செய்வோம் பாகிஸ்தானை.

சிந்திய இரத்தத்திற்கும்-பெண்கள்
சிந்தூரம் இழந்ததற்கும்
சிறிதேனும் ஈடுசெய்ய
சிந்தூர் செயல்திட்டம் மூலம்
சிதறடித்தோம் பாகிஸ்தானை.

தேச பக்தி கொண்டிணைவோம்.
தேசத்தைக் காத்திடுவோம்.

வந்தே மாதரம். வாழ்க பாரதம்.

ஜெய் ஹிந்த்.

தேசபக்தியுடன்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
14.05.2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button