கீழக்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

கீழக்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல் ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலையில் சார் ஆய்வாளர் வீர கணேஷ்,அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடினர், இந்நிகழ்வில் மத குருமார்கள் மற்றும் திமுக நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை நகர் பாரதிய ஜனதா கட்சி நகர் தலைவர் ரகு
புது கிழக்கு தெரு சங்கத்தின் நிர்வாகிகள் முகம்மது ஃபருஸ், ஹமீது அப்தாஹிர், சமூக ஆர்வலர் சேகு சதக் இப்ராகிம், திமுக நிர்வாகிகள் சுபீயான்,ஏபன், தில்லையேந்தல் ஊராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் பலர் கலந்து கொண்டனர்,இவ்விழாவில் காவல் ஆய்வாளர் பத்மநாபன் அவர்கள் பேசும் பொழுது பொங்கல் விழா அனைவராலும் விரும்பி கொண்டாடப்படும் ஒரு பண்டிகை அதை இணைந்து கொண்டாடியதில் மகிழ்ச்சி என்றும் கூறினார். மேலும், அனைத்து காவல்துறையினர் மற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர் ஆகியோருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தனர்.





