கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் மற்றும் கிரியேட் அமைப்பின் “நம்ம அரிசி இயக்கம்” இணைந்து, 2025 தேசிய நெல் விழா!!

கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் மற்றும் கிரியேட் அமைப்பின் “நம்ம அரிசி இயக்கம்” இணைந்து, 2025 தேசிய நெல் விழா!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வேளானூரில் 19வது தேசிய நெல் விழா மற்றும் பாரம்பரிய உணவுப் பொருள் விழா சிறப்பாக நடைபெற்றது
கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் மற்றும் கிரியேட் அமைப்பின் “நம்ம அரிசி இயக்கம்” இணைந்து, 2025 ஜூலை 23 அன்று வேளானூர் கிராம சமூக மண்டபத்தில் 19வது தேசிய நெல் விழா மற்றும் பாரம்பரிய உணவுப் பொருள் விழா சிறப்பாக நடைபெற்றது இது கிரியேட் நடத்திய நான்காவது நெல் விழாவாகும். வேளானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் தலைவராக கிரியேட் அமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் துரைசிங்கம் உரையாற்றினார். இம்மாவட்டத்தில் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவம், கிரியேட் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகள், நெல் வகை மீட்பு, விதை பராமரிப்பு, இளைஞர்கள், நுகர்வோர் மற்றும் பெண்கள் விவசாயிகளை இணைக்கும் பணிகள் குறித்து விளக்கினார். அரசு மேற்கொண்டும் இயற்கை விவசாய ஊக்கத் திட்டங்களை பாராட்டியதோடு, மேலும் வலுவான நடவடிக்கைகள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலர் திரு. செல்வம் அரசுத் திட்டங்கள், இயற்கை வேளாண்மையையும், பாரம்பரிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துவதிலும் விவசாய சந்தை வசதிகள் குறித்து விவரித்தார்.கிரியேட் திட்ட இயக்குநர் திரு. சுரேஷ் கண்ணா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைகள், பாரம்பரிய நெல் வகைகள் மீட்பு, அரசு ஊக்கத் திட்டங்களின் முழுமையான பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நுகர்வோர் பாதுகாப்பு போன்ற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதையும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய நெல் வகைகள்: பூங்கார், வாசனைசீராக சம்பா, கருப்புக்கௌனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பரமசிவம் நேர்முக அலுவலர் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இராமநாதபுரம் சுரேஷ் கண்ணா (மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்), திரு விஜயராமு பொருளாளர் கரண் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கத்தின் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர். விவசாயிகளுக்கு பூங்கார், வாசனைசீராக சம்பா, கருப்புக்கௌனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய ஐந்து பாரம்பரிய நெல் வகைகள் வழங்கப்பட்டன. செய்யது இப்ராகிம், கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் தலைவர் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கான விரிவான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மகேந்திரன், வேளானூர் ஊராட்சித் தலைவர்கள். நாகராஜ், மகேந்திரன்.விழாவுக்கு தலைமை வகித்தார். இராமநாதபுரம் நுகர்வோர் செயலாளர் லதா கலந்து கொண்டார்கள் சாந்தி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் வேளானூர் நன்றி கூறினார்




