கவிதைகள் (All)

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 

குழந்தைகள் , 

ஆணின் ஆண்மைக்கு  சான்றாக  நிற்கும்  படைப்புகள்    . 

பெண்ணிற்கு தாய்மையெனும் பெருமை சேர்க்கும் பிறப்புகள்  .

வம்சம் தழைத்து வளர , வந்துதிக்கும்  உயிர்கள்  .

குடும்பத்தில் குதூகலம் நிறைக்க வரும் பயிர்கள் .

அழகு முகத்தெழிலில்   மயங்கிவிடும்  மனங்கள் .  

மழலை மொழி கேட்டால்  , மறைந்து விடும் கவலைகள் .

தவழ்ந்து வரும் அழகில்  மகிழ்ந்துவிடும் இதயங்கள் .

கள்ளமில்லாச் சிரிப்பில் கொள்ளைபோகும் உள்ளங்கள் .

பிஞ்சுக் கரங்களின் மென்மையிடம் தோற்றுப்போகும்  மலர்கள் .

 இறைவன் படைப்பினிலே இதுதானே  அதிசயமே .

குழந்தையிடம் பழகிடும்போது  குழந்தையாவார் அனைவருமே. 

குழந்தை மனம் இருந்துவிட்டால் , குதூகலம் நிறைந்திடுமே . 

சண்டையிடும்  , அடுத்த கணம் சமாதானமாகிவிடும்  .

அடம் பிடிக்கும் , அடுத்தகணம் அதனை மறந்துவிடும். 

போட்டியிடும் , ஆனால் பொறாமையைத்   தவிர்த்துவிடும். 

அடிக்க வரும்  கரங்களையும் , அரவணைக்கச் செய்துவிடும். 

 வெகுளித்தனமான பேச்சால் வெகுவாகக் கவர்ந்துவிடும். 

மல்லிகையாய் , ரோஜாவாய் மணக்கின்ற  பருவமிது. 

முழுநிலவாய்  , தென்றலாய்  குளிர்கின்ற பருவமிது. 

பத்தரை மாற்றுப் பொன்னாய் ஒளிர்கின்ற பருவமிது. 

பாவங்கள் செய்யாத  பவித்திர  பருவமிது.  

சாதி, மத பேதங்கள் தெரியாத பருவமிது. 

இனம், மொழி பேதங்கள் பாராத பருவமிது. 

பொய், புரட்டு, சூது, வாது , தெரியாத பருவமிது 

வையகத்தில்  வாழ்வினிலே   வரமான பருவமிது . 

குழந்தைகள்  அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் , 

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் . 

14.11.2025.   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button