காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால், இரு கிராம மக்கள் தாகத்தை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் அருகே 600 குடும்பங்கள் வாழும் தாழியரேந்தல், 120 குடும்பங்கள் வாழும் மட்டியரேந்தல் கிராமங்களுக்கு, உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வளநாடு பாலத்திற்கு அருகே காவிரி குடிநீர் குழாய் ஒரு சிலரால் சேதப்படுத்தப்பட்டு, நெல் விவசாயத்திற்கு குடிநீர் பாய்ச்சப்படுகிறது. மறைமுகமாகவும், குழாய் சேதப்படுத்தபட்ட சுவடு தெரியாமலும் இருப்பதால் காவிரி குடிநீர் அதிகாரிகள் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது.

மேலும், குடிநீர் சப்ளை இல்லை என, தாழியரேந்தல் மற்றும் மட்டியரேந்தல் மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனுமில்லை என, புலம்பி வருகின்றனர்.இதுகுறித்து மட்டிரேந்தல், பன்னீர்செல்வம் கூறுகையில், “”பருவமழை இல்லாததால், காவிரி குடிநீரை மட்டுமே பிரதான குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், காவிரி குடிநீர் குழாயை உடைத்து, மூன்று மாதத்திற்கும் மேலாக, விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை” என்றார். காவிரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “” குடிநீர் குழாயினை சேதபடுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News

Read Previous

தேசிய வாக்காளர் தின ஊர்வலம்

Read Next

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published.