இரத்தம்

Vinkmag ad
ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். எனக்கு, உதிரம், குருதி, செம்புனல், செந்நீர்,  சுரோணிதம், சோணிதம் என்று பல பெயர்கள் உள்ளன. உங்கள் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் மிகவும் இன்றியமையாதவன். நான் உங்கள் உடலில் தொடர்ந்து சுழற்சியிலிருக்கும் இருக்கும் திரவமாவேன். இரத்த நாளங்கள் (தமனிகள் மற்றும் சிரைகள்) மூலம் என் சுழற்சி உங்கள் உடலில் நடைபெறுகிறது. நான் தூய நீரைவிட அடர்த்தி மிக்கவன். உங்களுடைய மொத்த உடல் எடையில், கிட்டத்தட்ட 7% என்னால் ஆனது. என் மொத்தக் கட்டமைப்பில் பாதியளவு பிளாஸ்மா என்னும் திரவத்தால் ஆனது. மீதிப் பாதியளவு, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ்   ஆகிய இரத்த அணுக்களால் ஆனது. இந்தப் பிளாஸ்மாவில் குளுக்கோஸும், சில கரையத்தக்க ஊட்டச்சத்துக்களும் (Soluble Nutrients) இடம்பெற்றுள்ளன. பிளாஸ்மாவில் உள்ள ஃபைபிரினோஜென் (Fibrinogen) என்ற கரையத்தக்க புரதம் என்னை விரைவாக உறைய (Freeze faster) வைக்க உதவுகிறது.  எனது சுழற்சி உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்கள் உடலுறுப்புகள்    உருவாக்கும் கழிவுகளையும் நானே வெளியேற்றுகிறேன். எனது சுழற்சி உங்கள் உடலில் நடக்கவில்லை என்றால், நீங்கள் உயிர்வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும்.

News

Read Previous

நபிகள் நாயகம் திருவரலாறு

Read Next

தேடல்

Leave a Reply

Your email address will not be published.