நபிகள் நாயகம் திருவரலாறு

Vinkmag ad

நபிகள் நாயகம் திருவரலாறு  படித்தது

இஸ்லாம் என்னும்  இறை மார்க்கந்தன்னை
இப்புவியில் நிலைநிறுத்த  இறைவன் சித்தப்படி
இறுதி  நபியாக ,    இறைதூதராய் அவதரித்த
புனிதராம் முஹம்மதுவுக்கு   , இப்பணியில் இப்புவியில்
இன்னல்கள் எத்தனை, இடைஞ்சல்கள் எத்தனை,
இழப்புக்கள் எத்தனை, எதிர்ப்புக்கள் எத்தனை,
இழிச்சொற்கள் எத்தனை  , ஏளனங்கள் எத்தனை ,
கல்லடிகள் , சொல்லடிகள், கபடான சூழ்ச்சிகள்
பல்விதமாகப் பாடாய்ப்படுத்தியும் – இறைவன்
அல்லாஹ்வின் அருளாலே அத்தனையும் தாங்கி
நல்லதோர் மார்க்கத்தை நல்லபடி நிறுவியதுவும்  .
கொலை, கொள்ளை, குடி , கற்பழிப்பு  என்று
கொள்கை ஏதுமின்றி கொடிய பழக்கங்களில்
மூழ்கிப்போயிருந்த மூடர்களுக்கெல்லாம்
வாழ்வின் பொருளுணர்த்தி , வழிமாறச்செய்ததுவும் ,
மார்க்கத்தை எதிர்த்து மக்காவின் மடமாக்கள்
மூர்க்கத்தனமாக செய்த முயற்சிகள் அனைத்தையும்,
தீர்க்கதரிசி அவர்கள் தீரமுடன் முறியடித்து, மக்களை
சேர்க்கும் பணியினை செவ்வனே செய்துவந்ததுவும்,
உருவ வழிபாட்டைக் கடைபிடித்த மக்களை
அருவ வழிபாடாம் , அல்லாஹ்வின் பாதைக்கு
வருவதற்கு அவர் எடுத்த  முயற்சிக்கு இடைஞ்சல்
தருவதற்கு எதிரிகள்  , தளராது முயன்றதுவும் ,
மக்காவை விட்டு எதிர்ப்புகளால் வெளியேறி
மதினா சென்று மக்களை எல்லாம் திரட்டி ,
மக்காவில் நடந்துவந்த உருவவழிபாட்டைத் தகர்த்து
காபாவில் தொழுகையை கடைபிடிக்க வைத்ததுவும் ,
அரேபியாவில் தொடங்கி , அகிலமெல்லாம் இஸ்லாம்
பரவி எழுச்சி  காண  , படை நடத்திச் சென்றதுவும்,
இறைவன் துணையாலே இத்தனையும் கடந்து
இஸ்லாமிய மார்க்கத்தை , இனிதே பரப்பியதும்   .
படிக்கப்  படிக்கப் பதறியது நெஞ்சம்
துடித்தது துயறுற்று , கதறியது கொஞ்சம் .
வாய்மை கடைப்பிடித்து , வாக்கினைக் காத்ததுவும்,
தூய்மை கடைப்பிடித்து  , தூய வாழ்க்கை வாழ்ந்ததுவும்
குர் -ஆனின் வழிநின்று , குணக்குன்றாய்த் திகழ்ந்ததுவும் ,
அறிந்திடச் செய்தது இவ்வரியநூல் அன்றோ .
நண்பர் இதயத்துல்லா , நல்லதொரு சந்திப்பில் ,
அன்பளிப்பாய்த் தந்த ,அருமையான புத்தகம்.
அப்துற்- றகீம் அவர்கள் ,அழகான நடையிலே
அண்ணல் நபி பற்றி அளித்துள்ள பெட்டகம் .
இந்நூலைப் படைத்தவருக்கும் , எனக்குக் கொடுத்தவருக்கும் நன்றி.
அல்லாஹ்வின் அருளால் அவர்கள் நல்லாயிருக்க வேண்டுகிறேன்
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .

News

Read Previous

ஔவையின் ஆத்திரம்

Read Next

இரத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *