தேடல்

Vinkmag ad

தேடல்
———

ஒவ்வொரு மனிதனின்
தேடலும் காலத்துக்கு காலம் வித்தியாயப்படும்.

ஒரு மனிதனுக்கே
ஒரே தேடலுக்கான பதில்கூட காலத்துக்கு காலம் வித்தியாசப்படும்.

அண்மைக்கால என் தேடலும் நான் புரிந்துகொண்ட பதில்களையும் இன்று பதிவு செய்து வைக்க விரும்புபின்றேன்.

உயிர்:-
என் தந்தையால் உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை.
ஏனெனில் அவர் எப்படி உருவாக்கினார் என்ற கேள்விக்கு என்னக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
ஆகவே என் தந்தை மூலம் உருவானேன் என்ற முடிவுக்கே வரமுடிகின்றது.

என் தாயின் துனையோடு அவள் கருப்பையில் உருமாறி இப்பூமியை தொட்டேன்.

என்னோடு உருவான பல லட்சம் சகோதர சகோதரிகள் அன்று என் தாயின் கருப்பையில் இடம்பிடிக்க முடியாத்தால் அன்றே இறந்துவிட்டார்கள்.

என்தந்தையிடம் நான் உருவாகும் போதும் அவரின் பல தலைமுறை ஞாபகங்களையும் தாங்கியே உருவேன்.

என்தாயிடம் சென்று உருமாற்றம் அடைந்தபோது அவளின் பல தலைமுறை ஞாபகங்களையும் இணைத்துக்கொண்டே உருமாறினேன்.

அந்த உயிர் எனது உடலில் எப்பாகத்தில் இருக்கின்றது என்ற கேள்விக்கு எனது உடலில் எல்லா இடங்களிலும் இருக்கின்றது என்பதே பதிலாக அமைகின்றது.

இந்த முடிவுக்கு வருவதற்க்கு கீழ் உள்ள வரிகள் துணை செய்கின்றன.

மூக்கை பார்
கண்ணை பார்
காலைப்பார்
காதைப்பார்
அவரைப்போல இவரைப்போல என்று அவர்களுக்கு தெரிந்த தந்தைவழி தாய்வழி பரம்பரையை நினைவுக்கு கொண்டு வருவார்கள்.

தந்தையிடம் இருந்து உயிர் தாங்கிவந்த ஞாபகங்கள் எம் அங்கங்கள் அனைத்திலும் இருப்பதால் உயிர் உடலின் எல்லா பாகத்திலும் இருக்கிறது என்ற முடிவுக்கு வரல்லாம்.

மேலும்
இன்று உலகில் அறியப்பட்டு பெருகிவரும் “குலோனிங் முறை”
விஞ்ஞான அறிவியலும் எமது ஒவ்வொரு செல்லிலும் உயிர் இருப்பதை நன்கு உறுதி செய்கின்றது.

இந்த பாதையில் இருந்து உன்வாழ்வியலுக்கு நீ எடுத்துக்கொள்ளும் பாடம்.

#   பல தலமுறையினரின் அனுபவங்கள் உன் ஞாபகத்தில் இருந்து உனக்கு வழிகாட்டுகின்றது.

#  உன் தந்தையிடம் இருந்து புறப்பட்ட பல லட்சம் சகோதர சகோதரிகள் உன் தாயின் கருப்பையிலே இடம்பிடிக்க முடியாது இறப்பதை உடன் இருந்து அறிந்ததால்
உன்வாழ்வில் எத்தனை இழப்புக்களையும்  தாங்கி வாழும் தன்னப்பிக்கை உன்னிடம் ஏற்கனவே உண்டு.

#  பல லட்சம் சகோதர சகோதரிகளை முந்தி தாயின் கருப்பையில் இடம்பிடித்த தையிரியமும் புத்திசாலித்தனமும் உன்னிடம் இயல்பாகவே உண்டு.

எனவே
உன்னால் முடியும்.
உன்னால் முடியும்.
உன்னால் முடியும்.
நன்றி.
– ரதி –

News

Read Previous

இரத்தம்

Read Next

விவசாயிகள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *