வாரியர் உடற்பயிற்சி

Vinkmag ad

வாரியர் உடற்பயிற்சி. உட்கார்ந்து எழுந்திருத்தல். ( Tai Chi Style)

1. நேராக நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் உங்கள் தோளின் அளவுக்கு அகலமாக இருக்கட்டும். நன்றாக மூச்சை 3 முறை இழுத்து வெளிவிட்டு சக்தியை சேகரித்துக்கொள்ளுங்கள். கைகளை நேராக முன்புறம் நீட்டிக்கொள்ளுங்கள்… உள்ளங்கை தரையை பார்க்கும்படி.

2. மெதுவாக அப்படியே உட்காரத்தொடங்குங்கள். சீரான வேகத்தில் உங்கள் உடம்பு கிழே 10 செகண்டில் இறங்கவேண்டும். மனதுக்குள்ளேயே 1 முதல் 10 வரை 1 வினாடி இடவெளியிருக்குமாறு எண்ண ஆரம்பித்து விடுங்கள் நன்றாக உட்காரும் நிலைக்கு !

3. அதே 10 வினாடிகள் அப்படியே உட்கார்ந்து இருக்கவும். மூச்சை இழுத்து மெதுவாக 10 வினாடிகளில் மெதுவாக சீரான வேகத்தில் எழுந்திருங்கள். இப்பொழுது ஒரு முறை செய்துவிட்டீர்கள். சபாஷ் ! அடுத்து . . .

4. 20 வினாடிகள் ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் 20 வினாடிகள் சீரான வேகத்தில் மெதுவாக அமர்ந்து 20 வினாடிகள் அமர்ந்த படியே இருந்து பின்பு 20 வினாடிகளில் சீராக எழுந்து நிற்கவும். இரண்டாவது முறையும் ஓவர். சியர்ஸ். அடுத்து . . .

5. 30 வினாடிகள் ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் 30 வினாடிகள் சீரான வேகத்தில் மெதுவாக அமர்ந்து 30 வினாடிகள் அமர்ந்த படியே இருந்து பின்பு 30 வினாடிகளில் சீராக எழுந்து நிற்கவும். மூன்றாவது முறையும் ஓவர். கிரேட். அடுத்து . . .

6. 40 வினாடிகள் ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் 40 வினாடிகள் சீரான வேகத்தில் மெதுவாக அமர்ந்து 40 வினாடிகள் அமர்ந்த படியே இருந்து பின்பு 40 வினாடிகளில் சீராக எழுந்து நிற்கவும். நான்காவது முறையும் ஓவர். சியர்ஸ். அடுத்து . . .

7. 50 வினாடிகள் ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் 50 வினாடிகள் சீரான வேகத்தில் மெதுவாக அமர்ந்து 50 வினாடிகள் அமர்ந்த படியே இருந்து பின்பு 50 வினாடிகளில் சீராக எழுந்து நிற்கவும். சாதனை மக்களே ! நீங்கள் சரியான எடைக்கும் சக்திக்கும் உரியவராகிவிட்டீர்கள். உடனே எனக்கு இன்பாக்சில் தகவல் அனுப்பவும் ! வாழ்த்துப்பதிவில் உங்களின் பெயரையும் சேர்த்துவிடுகிறேன் !

News

Read Previous

கோவையில் தமுஎகச – இலக்கிய சந்திப்பு

Read Next

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி

Leave a Reply

Your email address will not be published.