பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார் – பேரா. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

Vinkmag ad

துபாயில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேட்டி

 துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  இந் தியர் நல்வாழ்வு பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம்முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவருமான பேராசிரியர்  முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வருகை புரிந்தார்.

அவர் www.mdukulathur.com முதுகுளத்தூர்.காம் சமூக ஊடகத்துக்கு அளித்த பேட்டி விபரம் வருமாறு :

மாணவ பருவம் முதல் சமூகப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதால் பொதுப் பணிகளில் இயற்கையாக அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
இதன் காரணமாக 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம்முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.இந்த அமைப்பு சமூகப் பணிகள், தேர்தல் இல்லாத செயல்பாடுகள் மனித உரிமைப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்துடன் இணைந்து பல பணிகளை செய்து வருகிறது.
மனித நேய மக்கள் கட்சி
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தேன். 2009 ஆம் ஆண்டு மனித நேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன்.
தமுமுக இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்து வருகிறது.

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அரசு நிர்வாகத்தில் பொறுப்பில் இருந்து வரும் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு மக்கள் பணிகள் விரைவாக நடக்க ஆவண செய்யப்படுகிறது.

கூட்டமைப்பு
சமூகத்துக்கு எதிரான முக்கிய பிரச்சனைகளை எதிர் கொள்ள தமிழக அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந் து கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் தலைவராக தமிழகத்தில் ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைவராக இருப்பவர் அந்த பொறுப்பை வகிப்பார். தற்போது அந்த பொறுப்பை மௌலவி காஜா முகைதீன் பாகவி வகித்து வருகிறார்.

இந் த அமைப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக திரைப்படங்களில் காட்டப்பட்ட காட்சிகளின் காரணமாக விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதன் காரணமாக மாநாடு திரைப்படம் போன்றவை முஸ்லிம்களை நல்ல முறையில் சித்தரிக்க உதவியாக இருந்தது.சிஏஏ, என்.ஆர்.சி. உள்ளிட்டவற்ருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.தற்போது வந்துள்ள பீஸ்ட் திரைப்படம் முஸ்லிம்களை மோசமாக சித்தரித்தது. இந்த திரைப்படத்தை தடை செய்யவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மக்கள் சிந்தனைக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. திரைப்படங்கள் காரணமாக திராவிட கட்சிகள் வளர்ச்சியடைந் துள்ளது. அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் எழுதிய வசனங்கள், எம்.ஜி.ஆரின் நடிப்பு உள்ளிட்டவை காரணமாக அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆகக்கூடிய நிலைமை ஏற்பட்டது.சங் பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிந்தனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.தமிழகம் சமூக நல்லிணக்குத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இதனை சீர்குலைக்கவும், திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.  இதனை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

சட்டமன்ற பணி

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரான பின்னர் மிகவும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பினார். இதனால் மீண்டும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை பார்க்கும் போது அறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்ற கூற்று நினைவுக்கு வருகிறது.

சச்சார் அறிக்கையில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து புரிந்து கொண்ட தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.  இந்த இட ஒதுக்கீட்டில் பயனடைந் தவர்கள் தொடர்பாக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

மேலும் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை முருகன் கோவிலின் பிரகாரத்தை பொதுமக்கள் படியில் ஏறி சென்றே தரிசிக்க வேண்டும். அங்கு ஆய்வுக்காக சென்ற போது பொதுமக்கள் லிப்ட் அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து சட்டசபையில் வேண்டுகோள் வைத்த போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு விரைவாக செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சட்டமன்ற பொது கணக்கு குழுவில் உறுப்பினராக இருப்பதால் தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது.

இளையராஜாஇசைஞானி இளையராஜா அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு பேசியிருப்பது அவரது கவுரவுத்துக்கு இழுக்கு ஆகும். இது குறித்து அவரது மகனிடம் கேட்டிருந்தால் அவர் மறுப்பு தெரிவித்திருப்பார்.

பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார். கல்வி, சிந்தனையில் அம்பேத்கருடன், மோடியை ஒப்பிடுவது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.அரசியல் இந்திய ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளை யாரும் தொடங்குவது எளிது ஆகும்.  எனினும் இந் திய மக்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு முஸ்லிம்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர்.திமுக அரசு பொறுப்புக்கு வந்த பின்னர் சிஏஏ உள்ளிட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் சிஏஏ, என்.ஆர்.சி. உள்ளிட்டவற்றுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இதுபோல் சிறுபான்மையினர், பிற்பட்டோர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார். 

News

Read Previous

திருக்குறள் கதைகள்

Read Next

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.