துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

Vinkmag ad

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்கு
தான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலை
வழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

துபாய் :

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்கு தான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலை
தமிழக தொழிலதிபர் தஞ்சாவூர் மாவட்டம்  வழுத்தூர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் அன்பளிப்பாக வழங்கினார்.

துபாய் நகரின் ஜடாப் பகுதியில் மிகவும் பிரமாண்ட முறையில் புத்தக வடிவில் அமைக்கப்பட்ட ‘முஹம்மது பின் ராஷித் நூலகம்’ கடந்த மாதம் அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் கடந்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நூலகத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள் ஆங்கிலம், அரபி, தமிழ், சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்
இந்த நூலகத்தில் தமிழ் மொழி நூல்கள் அதிகம் இடம் பெறும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராஷித் நூலகத்தின் ஆலோசகர் டேவிட் அவர்களிடம் அறிவியல் அறிஞர் வழுத்தூர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் தான் எழுதிய ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூலில் இடம் பெற்ற கட்டுரைகள் தினத்தந்தி  நாளிதழில் 173 வாரங்கள் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலுடன் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்களால் வெளியிடப்பட்ட இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ‘அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்’ என்ற காவிய நூலும் வழங்கப்பட்டது. அப்போது ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மற்றும் இலங்கை செம்மொழி எப்.எம். நிறுவனத்தின் பிரதிநிதி மௌலவி சுபையிர் அஹில் முஹம்மத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாராட்டு
இந்த நூல்களைப் பெற்றுக் கொண்ட நூலக அதிகாரி ஒவ்வொரு மொழிக்கும் பிரத்யேக பகுதி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தமிழ் மொழி நூல்களும் இடம் பெறும். இதற்காக நூல்களை அன்பளிப்பாக வழங்கியமைக்காக வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் உள்ளிடட குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஏற்கனவே இந்த நூலகத்துக்கு ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’, மதுரை கவிஞர் இரா.இரவி எழுதிய ஹைக்கூ கவிதை நூல்கள், திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருமிதம்
அறிவியல் அறிஞர் வழுத்தூர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் கூறியதாவது : துபாய் நகரில் மிகவும் பிரமாண்ட நூலகத்தை ஏற்படுத்திய  ஆட்சியாளருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இதன் மூலம் அறிவுப் புரட்சி ஏற்பட வழிவகுக்கும். இதேபோல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நூலகங்கள் செயல்பட வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டும். விரைவில் தஞ்சாவூர் பகுதியில் தனது பெற்றோர்கள் நினைவாக நூலகம் ஒன்றை ஏற்படுத்த இருப்பதாவும் தெரிவித்தார்.

News

Read Previous

கலைஞரின் பேனா

Read Next

தமிழக அமைச்சருடன் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published.