கலைஞரின் பேனா

Vinkmag ad

கலைஞரின் பேனா .கலைஞரின் கைப் பேனா ,

கவின்மிகு மைப்பேனா ,

கவிதை பல வடித்த பேனா ,

கதைகள் பல எழுதிய பேனா,

காவியங்கள் பல படைத்த பேனா,

தொல்காப்பியம் விளக்கியபேனா

குறளோவியம் படைத்த பேனா,

தமிழன்உறக்கம் கலைத்த  பேனா,

முரசொலியில் எழுதிய முத்துப்பேனா,

எண்பத்தைந்து ஆண்டுகள் எழுதிக் குவித்த பேனா. 

 எழுச்சிபெற  வசனம் எழுதிய இரும்புப் பேனா ,

தொண்டர்களைக் கவர்ந்த 

துடிப்பான பேனா , 

எதிர்த்தோரை கலங்கடிக்கும்

எஃகுப் பேனா, 

நெஞ்சுக்கு நீதி தனை படைத்த பேனா ,

ரோமாபுரிப் பாண்டியனை வடித்த பேனா ,

பொன்னர் – சங்கர் சரித்திரம் உரைத்த பேனா .

இராமானுஜ காவியம் படைத்த பேனா ,

வங்கக் கடற்கரையில் அமையவிருக்கும் பேனா ,

தங்கத் தமிழ்த் தலைவனின் சிறந்த பேனா .

சிரந்தாழ்த்தி வணங்க வைக்கும்

சிறந்த பேனா.

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

7.8.2022. 

News

Read Previous

தடை செய்யப்பட்ட சொற்கள்

Read Next

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *