இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

Vinkmag ad

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியவர்களை கெளரவிப்பதன் பொருட்டு, இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சமாதான உச்சிமாநாடு, 10.09.2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிதழ்வில் அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதகு மிசுகோசி ஹைடேக்கி, மற்றும் இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் மேன்மைதகு மைக்கள் எப்லடோன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், இந்த நிகழ்வில் கெளரவப் படுத்தப்படுகின்ற பங்களிப்பாளர்களை வாழ்த்தியதோடு, தொடர்ச்சியாக அதன் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்றும் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் நிர்வாகத்தை பாராட்டினார்.

கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார ​நெருக்கடியிலிருந்து அதனை விடுவிக்க அந்நியச் செலாவணியை அதிகளவில் தரக்கூடிய ​ஆடை ஏற்றுமதித் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றில் நியுசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் பங்களிக்க வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்ட அந்நாடுகளின் தூதுவர்களை வேண்டிக்கொண்டார்.

நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதகு மிசுகோசி ஹைடேக்கி, இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் மேன்மைதகு மைக்கள் எப்லடோன் மற்றும் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் ஏ.எம்.எம். பஹத் ஆகியோரும் உரையாற்றினர்.

News

Read Previous

ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

Read Next

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published.