ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

Vinkmag ad

ஒருமாதகாலமாகஉடல்உறுப்புக்கள்செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த #ரியாத்மண்டல #இந்தியன்ஸ்வெல்ஃபர்ஃபோரம் (𝐈𝐖𝐅)

ஏகஇறைவனின்திருப்பெயரால்…

விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை ஒரு கால் செயலிழந்து மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

அவரை மீட்டு தாயகம் அனுப்புமாறு அவருடைய குடும்பத்தினர் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் #மண்டலதலைவர் #மீமிசல்நுர்முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரியாத் மண்டல #சமூகநலத்துறைசெயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட அப்துல் ரஜாக் அவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அனுப்புவதற்கு அனைத்து வேலைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.

அதனை தொடர்ந்து #கொடிப்பள்ளம்சாதிக்பாஷா அவர்கள் #மண்டலஇணைச்செயலாளர் #திருக்கோவிலூர்ஷாக்கீர்பேக் அவர்களும் உடனடியாக அப்துல் ரஜாக் அவர்களுடைய ஸ்பான்சரை தொடர்பு கொண்டு பேசி மருத்துவமனையில் நேரடியாக பலமுறை சந்தித்து அனைத்து விஷயங்களையும் விரைவாக முடித்து,

கடந்த 10/09/2022 சனிக்கிழமை அன்று #கணேசன் என்பவரோடு தாயகம் அனுப்பி வைத்தனர், சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த #செங்கல்பட்டுவடக்குமாவட்டதலைவர் #SKஜாகிர்உசேன் உள்ளிட்ட சகோதரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்துல் ரஜாக் அவர்களை விமான நிலையத்திலிருந்து #தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின்அவசரஊர்தியில் ஏற்றி அப்துல் ரஜாக் அவர்களுடைய சொந்த ஊரான திருவெண்ணைநல்லூரில் இருக்கும் அவர்களுடைய வீடு வரை கொண்டு போய் சேர்த்தனர்.

ஒரு மாத கால பல இன்னல்களுக்கு பிறகு நல்ல முறையில் வீடு கொண்டு வந்து சேர்த்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கும், பயணம் செய்த தனது உழியர் அப்துல் ரஜாக் மற்றும் பயண துணையாக பயணித்த நபருக்கும் சேர்த்து முதல் வகுப்பு #விமானபயணசீட்டை எடுத்து கொடுத்து #மனிதம்காத்த அப்துல் ரசாக் அவர்களின் #முதலாளி அவர்களுக்கும் பயணத் துணையை ஏற்பாடு செய்து கொடுத்த #இந்தியதூதரகஒருங்கிணைப்பாளர்கள் #சகோதரர்இம்தியாஸ் மற்றும் #ஜமால்_சேட் அவர்களுக்கும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், பொருளாதார வகையில் உதவி செய்த சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கும்

அப்துல் ரஜாக்கின் குடும்பத்தினர் உணர்ச்சி பொங்க நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்

இந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்ட
சமூகநலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாட்சா, இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கிர் பேக், கோவை மன்சூர், மற்றும் ஆர்எஸ் மங்கலம் சைபுல்லா ஆகியோருக்கு ரியாத் மண்டலம் நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

தகவல்:

𝐈𝐖𝐅ஊடகபிரிவு

மத்திய மண்டலம், ரியாத், சவூதி அரேபியா.

News

Read Previous

கிராம்பு

Read Next

இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

Leave a Reply

Your email address will not be published.