இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு

Vinkmag ad

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு

இராமநாதபுரம் :

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும்  பங்களாதேஷ் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி,  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வருகின்ற 20, 21  மற்றும்  22 ஆகிய தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியிலும்,

24 ஆம் தேதி வாரணாசியில்  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும்,

 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லக்னோ சஹாரா கிரிக்கெட் மைதானத்தில் மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றிலும் விளையாடுகின்றனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும், முதல்முறையாக டெஸ்ட் போட்டியும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளை  இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்துவது இந்திய திருநாட்டிற்கு பெருமை. இந்த இந்தியா வங்காளதேசம் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடருக்கான  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரம் கண்ணாடி வாப்பா சர்வதேச உடற்கல்வி ஆசிரியர் அப்பாஸ்  அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ராமநா தபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வானதிற்காக கண்ணாடி பாப்பா சர்வதேச பள்ளியின் முதல்வர் ஆதி அருணாச்சலம், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் இஸ்ரத் பரிதா, பள்ளியின் நிர்வாக அலுவலர் அன்சர், மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் அப்பாஸ் அலி அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News

Read Previous

இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

Read Next

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.