வரிகளாய் வடித்தேன்

Vinkmag ad

வரிகளாய் வடித்தேன்
————————————-
அன்பில்லா உறவு,
உப்பில்லா உணவு.
உள்ளார்ந்த அன்பு,
உலகையே வெல்லும்.

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர்,
உடனிருந்து கெடுப்போர்,
உறவை விலக்கிடுவோம்.

சகுனியின் சதுரங்க ஆட்டம்,
சங்கு சக்கரதாரியால் முடியும்.
சதியின் பேச்சில் மயங்கி
தடம் மாறிடும் பிள்ளைக்கு,

தாயும், தந்தையும் பாரமாகும்,
இவர் பிள்ளை என்ற… நிலை
மாறி இவர்கள் தந்தை…என
மாறிடும் காலம் வரும்.

உள்ளுணர்வின் வெளிப்பாடு தான்
வரிகளாய் இங்கு வடித்தேன்.
வாழ்க்கைப்பாடம் படித்தேன்.
வழிகாட்டியைத் தேடி அடைந்தேன்.

தஞ்சை ந.இராமதாசு,
எழுத்தாளர்.

News

Read Previous

முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை

Read Next

தந்தையர் தின கவிதை

Leave a Reply

Your email address will not be published.