தந்தையர் தின கவிதை

Vinkmag ad

தந்தையர் தின கவிதை
தாயின் தலைவனே தன்னலமற்ற ஜீவனே !
குடும்பத்தை தோள்மீது சுமக்கும் சுமைதாங்கியே !

சுகம் நூறு தந்திட ! உழைத்து ஓடாய் தேயும் உன்னத உறவே !
தோள் உயர்ந்த மகனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவரே !

மகளைத் தன் தாய் என அழைப்பவரே !
குருவுக்கு முன்நின்றவரே !
உயிர் கொடுத்து உறவானவரே !

தரணி போற்றிட தனக்கு ஒரு தினத்தை தக்கவைத்துக் கொண்டவரே !
தந்தை தினத்திற்கு தகுந்தவரே !

அன்பையும் அரவணைப்பையும் அன்னைக்கு இணையாய் அளிப்பவரே !

துன்பங்களையும் துயரங்களையும் தனக்குள்ளே புதைத்து !
புன்னகையை வெளிப்படுத்துபவரே !

மாற்றங்களில் மாறாத உறவே !
மகத்தான ஜீவனே ! மண்ணுலகம் விரும்பும் நாயகனே !

என் கண்களுக்கு தென்பட்ட முதல் வீரனே !
நான் சிரிக்க அகமகிழ்ந்தவரே !

குடும்ப நலம் காக்கும் குலதெய்வமாய் நிற்பவரே !
என் கல்யாண கடமை முடிக்க கண்கலங்கியவரே !

அப்பா அகில எழுத்துக்களும் போதவில்லையே உனைப்புகழ !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

வரிகளாய் வடித்தேன்

Read Next

அப்பா

Leave a Reply

Your email address will not be published.