புகை இல்லாத புகைவண்டி

Vinkmag ad

புகை இல்லாத புகைவண்டி

ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ

ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ

 

இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து

எதிர்த்திசையை நோக்கியே

விரைந்துசெல்லும் வண்டியைப்பார்

வீறுகொண்டு பறக்குதே

 

நீண்டுநெடுங் தூரம்ஓடி

நிற்குமிடம் தன்னிலே

மீண்டுஞ்சனங்கள் தம்மைஏற்றி

மிகவிரைவாய்ச் செல்லுமே

 

புகையிரதம் எனஇதற்குப்

பெயரிட்டார்கள் முன்னராம்

புகைவராத இன்றும் அது

புகையிரதம் தானடா

 

ஆடுமாடு மனிதர் பொருள்

அத்தனையும் சுமக்குமாம்

வீடுபோன்ற அறைகள்பல

வரிசையாக இருக்குமாம்

 

காடுமேடு வயல்நிலங்கள்

கடல்கடந்தும் போகுமாம்

நாடிரண்டை மூன்றைத்தொடுத்து

நீண்டபயணம் செல்லுமாம் !

 

( இலங்கை ஜின்னாஹ் ஷர்புதீன் எழுதிய எங்கள் உலகம் – சிறுவர் பாடல்கள் எனும் நூலிலிருந்து )

News

Read Previous

பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்

Read Next

இராஜா தேசிங்கின் நினைவிடம்…

Leave a Reply

Your email address will not be published.