கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!!

Vinkmag ad

கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!! – கவிச்சந்திரன் – துபாய்

 

ஒளியின்வெள்ளத்தில் பூத்த தாமரையோ

நிலவின்முகமெடுத்து வந்த தேவதையோ

அழகின்தரிசனத்தில் ஆனந்த மோகனமோ

அன்பின்ஸ்பரிசத்தில் அனுதினமும் ஆனந்தமோ?

தென்றல்குளித்துவந்து தேகம்காட்டியதோ?

தேனும்பாலுமென ஆறாய் ஓடியதோ?

செந்நெல் தலையசைத்து தெம்மாங்கு பாடியதோ?

செவ்விதழ் பரிசளித்து இளமை குலுங்கியதோ?

 

அந்திநேரம் ஆனந்த அவஸ்தையடா!

அலைகள் தவழுவதும் அன்பின் நெருப்பிலடா!

எத்தனை முயன்றும் இதயம் தவிக்குதடா!

என்ன நிலையிது என்று உள்ளம் கேட்குதடா!

 

சந்திரனைக் கொஞ்சம் தவறாமல் வரச்சொல்வேன்!

மந்திரம் போட்டதுபோல் மஞ்சத்தில்விழச்செய்வேன்!

மங்கிய ஒளியினிலே மங்கையின்தோள்சாய்வேன்!

பற்றிப் படரும்கொடி பாவையெனச் சொல்வேன்!

 

நேற்று நடந்ததுபோல் நினைவுகள் கொதிக்குதென்பேன்!

ஆற்றில் வெள்ளமோ அணைகடந்து செல்லுதென்பேன்!

அல்லும் பகலுமே என்னுள் ஒற்றை நினைவென்பேன்!

கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!!

கவிச்சந்திரன் – துபாய் 

 

News

Read Previous

ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம்

Read Next

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

Leave a Reply

Your email address will not be published.