அவன் தான் இறைவன்

Vinkmag ad

அவன் தான் இறைவன்
“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””
மண்ணின் உயிர் அவன்
விண்ணில் சூழ்ந்தவன் அவன்
நீராய் இருப்பதும் அவன்
காற்றாய் நிறைந்தவன் அவன்
கனலாய் சுடுபவன் அவன்

அகிலத்தை இயக்குபவன் அவன்
அனைத்து உயிரிலும் அவன்
அன்னை தந்தையும். அவன்
உன்னுள் இருப்பவன் அவன்
என்னுள்ளும் இருப்பதும் அவன்

உடலாய் உதிரமாய் அவன்
உயிராய் உணர்வாய் அவன்
கண்ணின் மணியாய் அவன்
எண்ணமும் எழுத்தும் அவன்
எங்கும் நிறைந்தவன் அவன்

கவியாய் இருப்பவன் அவன்
கருத்தாய் அமைபவன் அவன்
சொல்லும் செயலும் அவன்
ஆக்கமும் அழித்தலும் அவன்
கருணையின் வடிவம் அவன்

உண்டென்றால் எல்லாம் அவன்
மறுத்தால் இயற்கை அவன்
அறிவுக்கு அப்பால் அவன்
உண்மையின் வடிவம் அவன்
உணர்ந்தால் அவன் ‌இறைவன்.

தஞ்சை.ந.இராமதாசு
எழுத்தாளர்

News

Read Previous

கோவை சிறை முற்றுகை

Read Next

பாடும் பறவைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *